சிந்துவெளி_நாகரிகம்_இரவிச்சந்திரன்.pdf
இதை பேர் நூறு
நூறு
விதங்களில் சொல்லி இருக்
கிறார்கள். எனக்கு இதை இப்படிச் சொல்லத் தோன்று
கிறது. இரண்டாவது தடவை எதைப் படிக்கத் தோன்று
கிறதோ அதெல்லாம் இலக்கியம்தான். அந்த வகையில்
என் சிறுகதைகள் இலக்கிய அந்தஸ்து பெறத் தக்கவை.
இதைக் காலம் தீர்மானிக்கும். இலக்கியமும், இசையும்,
மற்ற எவ்வித நுண்கலைகளுமே பிறக்குமிடம் மத்ய தர
வர்க்கத்திடமிருந்துதான். இது இங்கே மட்டும் என்றில்லை.
உலகில் எங்கேயும்தான். அந்த மத்யதர வர்க்கக் குடும்பத்
தில் இருந்து வந்த நான், அந்தக் கும்பலுக்கு இருக்கிற,
அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளைச் சுவையாக நாவல்
சிறுகதை
வடிவத்தில் எழுதுவது, நுண்கலை அல்லது
இலக்கியத்துக்கு, இசைக்குச் செய்கிற ஒரு துளி உபகாரம்
என்று எண்ணுவதில் தீவிர பிரக்ஞை உடைய எளியவன்.
அதையே செய்யத்தான் முயன்று அதன் ஆரம்பத்தில்
இருக்கிற குழந்தை. குழந்தைக்குத் தளிர்நடைதானே.
ஆகவே தவழும், தடுக்கும், நிலை தடுமாறும், விழப்
பார்க்கும், விழுந்து காயம் பண்ணிக் கொள்ளும். மீண்டும்
எழுந்து நிலைபற்றும், மறுபடி பிறழும், நடை மறக்கும் ஓட
அவசரப்படும். குழந்தை இதைத்தான் செய்யும். பிறகு
குழந்தை என்ன ராஜநடையா போடும் என்று ஒரு வரி
ஆறுதலாகச் சொல்லுங்கள். எனக்கு அது போதும்.
விழுந்த வலி எல்லாம் மறந்து போகும்.
உங்களிடம் இருந்து நான்
அவ்வளவே.
மல்லேஸ்வரம்
நண்பர்கள் நிறைந்த மாலை
ஜுலை 1983
எதிர்பார்ப்பதெல்லாம்
அன்பான
இரவிச்சந்திரன்
சிந்துவெளி_நாகரிகம்_இரவிச்சந்திரன்.pdf
34.1MB
Join Our Exclusive Telegram Channel
Get Instant Updates and Latest Posts!
JOIN NOW