மோகினித் தீவு
நூலாசிரியர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி
சாரதா பதிப்பகம்
மொழி : தமிழ்
நூல் வகை: குறுநாவல், நாவல், கதைகள்
நூல் குறிப்பு:
மோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும். திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து வெறுத்து இருக்கும் ஒருவருக்கு, பிழைப்புத் தேடி பர்மா சென்ற அவரது நண்பர் ஒருவர் சொல்வது போல அமையும் கதையே இந்த நாவலாகும்.
தமிழகத்தில் இருந்து பர்மா செல்லும் ஒருவர் பழைய சரக்குக் கப்பல் ஒன்றில் மிகுந்த பிரயாசத்துடன் பயணம் செய்கின்றார். உலக யுத்த காலத்தில் பயணம் செய்யும் இந்தக் கப்பல் இடையில் ஒரு விபத்தைச் சந்திக்கின்றது. விபத்தில் சிக்கிய நண்பர் உயிர் பிழைத்து ஒரு தீவை அடைகின்றார். அந்தத் தீவில் மனித நடமாட்டம் எதுவும் இல்லாத போதும் ஒரு ஆடவனும், பெண்ணும் இருக்கின்றார்கள். அவர்கள் தமிழில் கூடப் பேசுகின்றார்கள். இந்த தீவில் நடைபெறும் கதையையே இந்த நாவல் வடித்திருக்கின்றது. அற்புதமான கதை அமைப்புகள் உங்களை ஆச்சரயத்தில் ஆழ்த்தும் திருப்புமுனைகள் என்று இந்த நாவலில் இல்லாத அம்சங்களே இல்லை. அமரர் கல்கியின் ரசிகர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நாவல் இது.
Download PDF
Telegram Channel