ஜென்ம கைதிகளும் ஒரு சின்னப் பொண்ணும்
Published: September 18, 2019
*உங்கள் இதயத்துடிப்பை எகிற வைக்கும்*
*பல இடங்களில் பதற வைக்கும்*
*ஜென்ம கைதிகளும் ஒரு சின்னப் பொண்ணும்*
*சௌதாமினி எழுதிய அதிரடி ஆக்ஷன் அட்வென்ச்சர் த்ரில்லர்*
சைபீரியா சிறைச்சாலை....
உணவுப் பற்றாக்குறையால் கைதிகளை தனக்குத் தானே சவக்குழியை வெட்டிக்கொள்ள உத்தரவிடும் கொடூர மனம் படைத்த கேப்டன்களையும் கமாண்டர்களையும் அதிகாரிகளாக கொண்ட ஒரு மிக பயங்கரமான ரத்த பூமி.. அங்கு கைதிகளுக்கு கொடுக்கப்படும் சித்திரவதைகள் நரகத்தை விட மோசமானவை. ஒரு கைதி கூட தப்பிக்க முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கே மிகவும் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. அப்படியே தப்பித்தாலும் சுற்றிலும் சூழ்ந்து இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் சுற்றளவுள்ள உறைந்த பனிப் பாலைவனம் அதில் அலையும் பனிக் கரடிகள் ஓநாய்கள் மிக மிக ஆபத்தானவை..
அப்படிப்பட்ட இடத்தில் இருந்து தப்பிக்க முடிவு செய்கிறான் கார்க்கி. தன் நண்பன் பக்கிங்காமையும் ஒரு துணை டாக்டரையும் ஆஸ்துமா நோயாளியையும் உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்கிறான் . ஒரு அரக்க குணம் படைத்த கேப்டனின் மனைவி இவர்கள் மீது இரக்கம் காட்டுவது மட்டுமே அவர்களது ஒரேஒரு நூலிழை நம்பிக்கை. அவர்கள் தப்பிக்க முடிவு செய்யும் நேரத்தில் சீப் டாக்டரின் மகளாகிய மெர்லின் என்ற துப்பாக்கி சுடுவதில் மெடல் வாங்கிய ஒரு சின்னப் பெண்ணும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறாள்.
இன்னும் அதிகமாக சொல்லப்பட்டால் முன்னுரை கூட சற்று சுவாரசியத்தை குறைத்துவிடலாம்.. இந்தக் கதையின் ஒவ்வொரு வரியும் திடுக்கிடும் மனதுடன் நம்மை திகைப்பாக படிக்க வைக்கும். பிரம்மாண்டமான ஒரு ஆங்கிலத் திரைப்படத்தை பார்த்த திருப்தியை முழுமையாக நம் மனதுக்கு அளிக்கும். அதிலும் எல்லைக்கு அருகில் இருக்கும் அந்த டிரான்ஸ் சைபீரியா ரயில்வே பாலத்திற்கு அடியில் நடக்கும் கிளைமாக்ஸ் நேரத்து ஆக்ஷன் அட்வென்ச்சர்கள் துடிதுடிக்கும் இதயத்துடன் பக்கங்களை புரட்ட வைக்கும்.
மொழிபெயர்ப்பு கதை அல்ல என்று ஆசிரியரால் முன்னுரையில் சொல்லப்பட்டிருக்கும் இந்த நாவல் பாக்யாவில் தொடராக வெளிவந்தபோது கதையின் கதாபாத்திரங்களின் பேரில் ரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப் படும் அளவிற்கு மக்களின் இதயத்தைக் கொள்ளை கொண்டது. இதோ இன்றும் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக பல வாட்ஸ்அப் குரூப்களில் தங்களது எதிர்பார்ப்புகளையும் படித்த போது ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டவர்கள் பலர்.. இந்த அற்புதமான படைப்பு இன்று உங்களுக்கு பிடிஎஃப் வடிவில்
❤ *உங்கள் இதயத்துடிப்பை எகிற வைக்கும்* ❤
💗 *பல இடங்களில் பதற வைக்கும்* 💗
😖😖😖விடுபட்ட 4 பக்கங்களும் இணைக்கப்பட்ட புதிய இணைப்பு😉😉😉👇
http://bit.ly/2QbLAAh
*ஜென்ம கைதிகளும் ஒரு சின்னப் பொண்ணும்*
*சௌதாமினி எழுதிய அதிரடி ஆக்ஷன் அட்வென்ச்சர் த்ரில்லர்*