பாக்யா இதழில் தொடராக வந்த நாவல்..குகை மனிதன்!
பரபரப்பும்,விறுவிறுப்பும்,திடுக்கிடும் திருப்பங்களும் நிறைந்த மர்ம நாவல்..!
மேடம் சோபியாவின் திராட்சை பண்ணையில் அடிக்கடி நடக்கும் துர் மரணங்களாலும்,தோட்டத்து பணிப் ெபெண்களின் கற்பு சூறையாடலாலும் அந்த பகுதி மக்கள் பெரும் வேதனையில் உள்ளாழ்ந்திருக்கும் அந்த சமயத்தில் சிறைப் பறவைகளான ஆண்டனியும்,அவனது நண்பர்களும் அந்த திராட்சைப் பண்ணையில் கன்னம் வைக்க முடிவு செய்து உள் நுழைகிறார்கள்..
அது சிரமமான காரியம் என்பதைப் புரிந்து கொண்டு ஆண்டனியை மட்டும் அனுப்புகிறார்கள்..
வேலையாளாக தோட்டத்தல் நுழையும் ஆண்டனி வெகு சீக்கிரத்திலே மேடம் சோபியாவின் அன்புக்குப் பாத்திரமாகிறான்..அவளது குழந்தை லீனாவும் ஆண்டனியை விட்டு பிரிவதில்லை..குகை மனிதனிடமிருந்து ஒரு சமயம் சோபியாவையும்,லீனாவையும் காப்பாற்றும் ஆண்டனி அடுத்தடுத்து நடக்கும் மர்மச் சம்பவங்களால் அதிர்ச்சியாகிறான்..
யார் அந்த குகை மனிதன்..
எதற்காக இத்தனை கொலைகள்...
சோபியாவின் வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கும் மர்மங்கள் என்ன..
சோபியாவின் கணவன் என்ன ஆனான்...
இது போன்ற ஏகப்பட்ட கேள்விகளுக்கு கடைசி பக்கங்கள் விடை பாவிக்கின்றன..!
அற்புதமான
வறு விறுப்பான எழுத்து நடை பிரம்மிக்க வைக்கிறது.!
படித்து விமர்சனம் பகிருங்கள்!
Download PDF
Join Our Exclusive Telegram Channel
Get Instant Updates and Latest Posts!
JOIN NOW
