மாயாஜால வாள்

மாயாஜால வாள்

Uploaded:

*ஃபிளாஷ் கார்டன் தோன்றும்*
*மாயாஜால வாள்*
*விரைவான சம்பவங்கள் கொண்ட*
*முழு வண்ண இந்திரஜால் காமிக்ஸ்*

கொடுங்கோலன் மிங்கின் அங்கீகரிக்கப்படாத மனைவியாகிய தன் தாய் யூடா மரணதண்டனைக்கு ஆளாக்கப்பட இருப்பதை அறிந்து அவளைக் காப்பாற்றுகிறான் சிங்கின் மகன் யூ -லன். அதன் பின் தாங்கள் சிறை வைக்கப்பட்டு இருப்பதைக் கூட அறியாத மிங்கின் அங்கீகரிக்கப்படாத வாரிசுகள் அனைவரையும் ஒன்று திரட்டுகிறான்.. மிங்கின் கொட்டத்தை அடக்கி ஆட்சியையும் கைப்பற்றுகிறான். அவனது கையிலிருக்கும் அவனுக்கு மட்டுமே கட்டுப்படும் மாயாஜால வாள் ஒன்று பிளாஷ் கார்டனையே கைது செய்யும் அளவிற்கு வலிமையானதாக இருக்கிறது. சூழ்நிலை அறிந்து அவனுக்கு அடங்கி வாழ்வதைப் போல் நடிக்கும் மிங் யூ-லனுக்கும் பிளாஷ் கார்டனுக்கும் இடையே சண்டையை மூட்டி விட நினைக்கிறான்..

தனது வாளின் சக்தியால் தலைகனம் ஏறிவிட்ட யூ-லனை அடக்குவது மிங்கை ஒழிப்பதை விட தலையாய பணியாக பிளாஷ் கார்டனுக்கு தெரிகிறது. மிகவும் விறுவிறுப்பான சுவையான பக்கங்களில் இந்தப் படக் கதை இந்த சிக்கல்களின் முடிவை விவரிக்கிறது. அதிலும் வாசிப்பதை சிரமமாக்காத வகையில் பொதுவான இந்திரஜால் காமிக்ஸ்களைவிட சரளமான தமிழ் மொழிபெயர்ப்பில் இந்தப் படக் கதை அமைந்திருப்பது நம்மை இன்னும் பரவசமாக்கும்... இதன் பிடிஎஃப் இன்று உங்களுக்கு விடுமுறை விருந்தாக.....

http://bit.ly/303kgHW

*ஃபிளாஷ் கார்டன் தோன்றும்*
*மாயாஜால வாள்*
*விரைவான சம்பவங்கள் கொண்ட*
*முழு வண்ண இந்திரஜால் காமிக்ஸ்*
Join Our Exclusive Telegram Channel Get Instant Updates and Latest Posts!
JOIN NOW