--> Skip to main content

வேதாளரின் பழிவாங்கும் லுபாங்கா

*முகமூடி வேதாளர்*
*எதிர்கொள்ளும்*
*பழிவாங்கும் லுபாங்கா* *pdf*
*இதுவரை எந்தப் பதிப்பகத்தாலும்*
*தமிழில் வெளியிடப்படாத*
*தரமான மொழிபெயர்ப்பு படக்கதை*
*மீள்பதிவு* *pdf*
நம் நண்பர் படக்கதைகளின் பாதுகாவலர் திரு ஜானி இன்று தனது இரண்டாவது தவப்புதல்வனை பெற்றெடுத்திருக்கிறார் அவரது இளைய மகன் தன் தந்தையைவிட ஆயிரம் மடங்கு நலங்களை பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம் . அத்தோடு
காமிக்ஸ் ஆர்வலர் சுரேஷ் சந்த் அவர்களின் இளையசகோதரிக்கும் இன்று பிறந்தநாள். இந்தப் பிறந்தநாட்களை சிறந்த நாளாக்க இன்றைய இனிய மீள்பதிவு pdf

டென்காலி ..
வேதாளரின் கானகம் உட்பட பல அழகிய வனப்பகுதிகள் சூழ்ந்த அற்புத நாடு..
அங்கே ஒவ்வொரு நாளும் பல பங்க் கொள்ளைகள் அரங்கேறுகின்றன.. களவாடப்பட்ட பணமோ ஆற்றில் வீசி எறியப்படுகிறது. அந்த நாட்டின் அதிபர் தனது இனிய நண்பர் நோவாவின் ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறதோ என துப்பறிய வரும் வேதாளருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

முன்பொரு காலத்தில் வேதாளரால் கைது செய்யப்பட்டு இறந்து விட்டதாகக் கருதப்பட்ட மாந்திரீக வித்தைகளில் தேர்ச்சி அடைந்த வில்லன் லுபாங்கா தன் சக்திகளை பல மடங்குகளாக பெருக்கிக்கொண்டு டென்காலிக்கு வந்து அதிபர் லுபாகாவையே மனோவசியப்படுத்தி வேதாளருக்கு எதிராக துப்பாக்கியை நீட்ட வைக்கிறான். அந்த துப்பாக்கிகளின் தோட்டாக்கள் வேதாளரை நெருங்கி வர அவர் எப்படி தப்பித்தார்? அடர்ந்த கானகத்துக்குள் தங்களைத் தேடும் இன்று லுபாங்காவின் ஆபத்தான படையிலிருந்து வேதாளரும் பனித் தேவதை என்றழைக்கப்பட்ட சாரா என்ற பெண்ணும் தப்பியது எப்படி? ஆழ நடுக்காட்டுக்குள் தங்களைத் தேடிய பெரும் படையிடம் சிக்காமல் வெளிவந்தது எப்படி?

அடர்ந்த கானகத்தில் ஆவேசமான துரத்தல்களும் அரண்மனையை மீட்க நடந்த அற்புத வியூகங்களும் நம்மை திகைப்பூட்டும் வைக்கும் pdf இன்றைய இனிய பொழுதை விறுவிறுப்பாக்க மிகத்தெளிவான வண்ணப் படங்களோடு


Buka Komentar
Tutup Komentar