-->

சாப நகரம் - இந்திரஜால் காமிக்ஸ்


*வேதாளரின் வருகைக்காக காத்திருக்கும்*
*சாப நகரம்*
*வித்தியாசமான வினோதமான விரைவான படக்கதை*

வேதாளரின் கானகத்தில் இருந்து வெகு தூரத்தில் இருக்கிறது ஒரு பாழடைந்த நகரம். புதர் மண்டிக்கிடக்கும் அந்த நகரத்தில் இரவிலே பலநூறு ஆவிகள் நடமாடுவதாக மக்களின் நம்பிக்கை.

பலநூறு ஆண்டுகளுக்கு முன் பீனிக்ஸ் என்ற கொடுங்கோல் அரசனும் டெஸிரி என்ற அவனது மகளும் கொடூர ஆட்சி நடத்திய நகரம் அது. இளவரசியின் அழகுக்காக அவளை பெண் கேட்டு வரும் பல நாட்டு அரசர்கள் கடுமையான போட்டிகளால் கொல்லப்படுவதை அரசனும் இளவரசியும் ரசிக்கிறார்கள். ஊர் மக்களும் வெளியூர் வாசிகளை கொன்று பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். இதில் இறந்தவர்களின் சாபத்தால் கடவுள் இடிகளையும் மின்னல்களையும் அனுப்பி அந்த நகரத்தையே அழித்தார் . அதன்பின் என்றோ ஒரு நாள் அந்த சிதில நகரை காப்பாற்ற வேதாள நட்சத்திரம் என்று ஒன்று வரும். அத்துடன் ஒரு வீரரும் வருவார் என்பது பழங்குடியினரிடையே உலவும் ஒரு கதை

இதற்கிடையே ஒரு ஆள்கொல்லி புலி சாப நகரத்தின் அருகில் உள்ள கிராமங்களை தாக்க அந்தப் புலியைக் அடக்குவதற்காக வேதாளர் அந்தப் பகுதிக்கு விரைகிறார். வேதாள நட்சத்திரமும் அந்த நேரத்திலே வானத்தில் தோன்றி அவரைத் தொடர்கிறது.

முடிவு என்ன என்பதை சொல்லும் வித்தியாசமான இந்த படக்கதையின் pdf இன்று உங்களுக்காக