-->

துப்பாக்கியின் மைந்தன்

*துப்பாக்கியின் மைந்தன்*
*இரக்கமற்ற மனமும்*
*இதயமற்ற குணமும்*
*கொடூரச் செயல்களும்*
*கொலைவெறிகொண்ட கைகளும்*
*வித்தியாசமான* *விறுவிறுப்பான* *மொழிபெயர்ப்புப்* *படக்கதையின்*
*மீள்பதிவு*


நம் அனைவருக்கும் நண்பரான காமிக்ஸ் காவலர் சுரேஷ் சந்த் அவர்களின் இளைய மகனுக்கு இன்று பிறந்த நாள். இந்த நாளின் இனிமையை இரட்டிப்பாக்க இன்றைய மீள்பதிவு

தடதடக்கும் மிஷின் கன்களின் சத்தங்களுக்கு நடுவில் அனாதையாக கண்டெடுக்கப்படும் ஜூன்டோ தன்னை வளர்த்தவரின் கொடூர கொலையை கண்ணால் பார்த்த பின் அசுரகுணம் உள்ளவனாகிறான். அவனது வாழ்க்கையில் மனசாட்சியோ இரக்கமுமோ மனிதாபிமானமோ சற்றும் குறுக்கிட்டது கிடையாது.

அதிபர் மாளிகையின் அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்களிடம் அன்பைப் பெற அவன் செய்யும் அட்டகாசங்கள் கொடுமையான சாகசங்கள். பரிதாபத்திற்குரிய கிழவியானாலும் பகட்டான குமரியானாலும் கொலை செய்ய அவன் தயங்கியதேயில்லை. அந்த கிராதகமனம் மாற்றம் அடைந்ததா?

எவராலும் எவ்வளவு யோசித்தாலும் அடுத்து நடக்கப்போவது என்ன என்று யூகிக்க முடியாத வகையில் இருக்கும் 220 பக்கங்களையும் முழுமையாகப் படிக்காமல் கீழே வைக்க முடியாத அளவு வீரமும் தீரமும் கொடூர சம்பவங்களும் விரோத எண்ணங்களும் சூழ்ந்த உன்னத தரம் வாய்ந்த இந்த மொழிபெயர்ப்பு படக்கதை இன்று உங்கள் பொழுதை விறுவிறுப்பாக pdf ஆக

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இதனை ஒருங்கிணைத்து வெளியிட்ட குருநாதர் ரஞ்சித் அவர்களுக்கும் இந்த நீண்ட கிரைம் கதையின் மொழிபெயர்ப்புக்காக பாடுபட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளுடன்