-->

மரணப் போர் பாகம் 1 2 & 3 - இந்திரஜால் காமிக்ஸ்

*பிளாஷ் கார்டனின்*
*சரவெடி அதிரடியில்*
*மரணப் போர்*
*மூன்று பாகங்களும்*
*இந்திரஜால் காமிக்ஸ்*

மாங்கோ கிரகத்தின் அர்போரியா காட்டுப்பகுதியில் செல்லும்போது இளவரசர் பாரினில் சமாதான ஒப்பந்தத்தை மீறி கொரில்லா மனிதர்களால் பிளாஷ்கார்டன் குழுவினர் தாக்கப்படுகிறார்கள் டேவும்ம் ஜர்க்காவும் கடத்தப்பட பலத்த முயற்சிக்குப்பின் பிளாஷ்கார்டன் அவர்களைக் காப்பாற்றுகிறார்.. வீடு திரும்பிய பின்னரோ இது தொடர்கதையாகிறது.


மாங்கோ கிரகத்தின் பழங்குடிகள் அனைவரும் ஒப்பந்தத்தை மீறி மற்றவர்களை தாக்குகிறார்கள். கொடுங்கோலன் மிங் இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான். அனைவரும் இந்த அசாதாரண சூழ்நிலைக்கு காரணமே மிங்தான் என்று நினைத்து இருக்கும் வேளையில் அந்த சூழ்ச்சியில் மிங்கும் அகப்பட்டு தாக்கப்பட விஷயம் இன்னும் சிக்கலாகிறது. இந்த மர்மத்தை துப்புத் துலக்க தனியே செல்லும் பிளாஷ்கார்டன் ஸ்கார்பியோ எனப்படும் இருள் மனிதர்களை சந்திக்கிறார். பெரும் படைபலத்துடன் மாங்கோ கிரகத்தை சுற்றிக் கொண்டிருக்கும் அவர்களை ஒழிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக கொடுங்கோலன் மிங்கும் இளவரசர் பாரினும் ஒன்று சேர்ந்து போரிட கிளம்புகிறார்கள்.

விண்கலங்கள் அணுக்கதிர் வீச்சு ஹைட்ரஜன் குண்டுகள் என நடக்கும் அந்த நீண்ட போரில் பிளாஷின் வியூகங்களும் வீர தீரமும் விறுவிறுப்பான பக்கங்களில்..

40 ஆண்டுகளுக்கு முன்பே வீடியோ கான்பரன்ஸ் கூகுள் லொகேஷன் மேப் என பிரமிப்படைய வைக்கும் இந்தக் கதையில் விதவிதமான விண்கலங்களின் வண்ணப்படங்களும் பல்வேறு கிரகங்களின் வடிவமைப்புகளும் பார்ப்பவரை வியக்கவைக்கும் pdf ஆக