பஞ்சதந்திரக் கதைகள் | ப. சரவணன் |
இப்புத்தகத்தை பற்றிDownload PDF
👇👇👇👇👇👇
காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருபவை என்றாலும் ஒருசேர பஞ்சதந்திரக் கதைகளை வாசிக்கும்போது ஒரே சமயத்தில் குதூகலமும் மலைப்பும் ஏற்படுகிறது.
ஒரு கதை, அந்தக் கதையையொட்டி இன்னொன்று, அந்த இன்னொன்றின் வாலைப் பிடித்து மற்றொன்று என்று அடுத்தடுத்து விரிந்துசெல்லும் இந்தக் கதைகளை சுவாரஸ்யத்துக்காகவே திகட்டத் திகட்டப் படித்து மகிழலாம். அல்லது, ஒவ்வொரு கதையிலும் ஒளிந்துள்ள ஆழமான அரசியல் பாடங்களையும் ராஜதந்திர நுணுக்கங்களையும் கண்டறிந்து மலைத்துப் போகலாம்.
அப்போதைய அரசர்களுக்கு உதவும் பொருட்டு மிகுந்த சாதுரியத்துடன் உருவாக்கப்பட்ட இந்தக் கதைகள் இன்றைய காலகட்டத்துக்கும் கச்சிதமாகப் பொருந்துவதைப் பார்க்கும்போது மலைப்பும் மகிழ்ச்சியும் இரட்டிப்பாகின்றன.
பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் நம்மை மகிழ்விக்கும் இந்தப் பஞ்சதந்திரக் கதைகள் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். காலத்தைக் கடந்து நிற்கும் இந்த அற்புத கிளாசிக்கை நமக்கு நெருக்கமான மொழியில், ஈர்க்கும் முறையில் மறு வார்ப்பு செய்திருக்கிறார் நூலாசிரியர் ப. சரவணன்.
குழந்தைகள், பெரியவர்கள் இருவரிடமும் உரையாடுவதற்கு பலவித மிருகங்களும் பறவைகளும் இந்தப் புத்தகத்தில் காத்திருக்கின்றன. மொத்தம் 81 கதைகள். படிக்க, பாதுகாக்க, பரிசளிக்க ஏற்ற அற்புதமான புத்தகம் இது.
💐💐💐💐💐💐💐💐
ஆசிரியரின் (ப. சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :
வள்ளலாரின் மநு முறைகண்ட வாசகம்
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
ஞானத்தின் விளிம்பிலிருந்து ஓஷோ உபதேசங்கள்
நாலடியார் (ஆங்கில மொழிபெயர்ப்புடன்)